அவனை மட்டும் சும்மா விடாதீங்க: ஆசிட் வீச்சில் இறந்த வினோதினியின் கடைசி ஆசை

Subscribe to Oneindia Tamil

Vinothini
சென்னை: ஆசிட் வீச்சில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த என்ஜினியர் வினோதினி தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவரை சும்மா விடக் கூடாது என்ற தனது கடைசி ஆசையை தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் என்ஜினியராக பணியாற்றினார் காரைக்காலைச் சேர்ந்த ஜெயபாலின் மகள் வினோதினி. அவர் தீபாவளிக்கு ஊருக்கு சென்ற இடத்தில் அவரை ஒரு தலையாக காதலித்த கட்டிடத் தொழிலாளி சுரேஷ் அவர் முகத்தில் ஆசிட் ஊற்றினார். இதில் வினோதினியின் முகம் வெந்துபோனதுடன் அவரது கண் பார்வையும் பறிபோனது.

இதையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட வினோதினி கடந்த 87 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். முன்னதாக தனது கண் பார்வை போன பிறகு அவர் கூறுகையில்,

அம்மா என் பார்வை போய்விட்டதே. இனி நான் வாழ்ந்தாலும் உங்களை எல்லாம் பார்க்க முடியாதே. தயவு செய்து என்னை கொன்றுவிடச் சொல்லுங்களேன். என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய சுரேஷை மட்டும் சும்மா விட்டுவிடாதீர்கள் என்று கூறி கதறி அழுதுள்ளார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். வினோதியின் கடைசி ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+