23 வயது பெண்ணிடம் பிக் பாக்கெட் அடித்த 24 வயதுப் பெண் கைது
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: ஓசூர் பஸ் நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த பெண்ணிடம் பிக்பாக்கெட் அடித்த ஆந்திரப் பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
ஓசூர் நேதாஜி சாலையை சேர்ந்தவர் அர்ச்சனா. 23 வயதான இவர் ஓசூர் பஸ் நிலையத்தில் வெளியூர் செல்ல காத்திருந்தார். அப்போது, அர்ச்சனாவுக்கு அருகில் நின்ற பெண் ஒருவர், அர்ச்சனாவிடம், 500 ரூபாயை பறித்துக் கொண்டு ஓட்டம்பிடித்தார்.
இதையடுத்து அர்ச்சனா சத்தம் போட்டதில், பக்கத்திலிருந்த பயணிகள் அவரை மடக்கி பிடித்து டவுன் போலீஸில் ஒப்படைத்தனர்.
போலீஸார் அவரை விசாரித்ததில், அவர், ஆந்திரா மாநிலம் கடப்பாவை சேர்ந்த காளிராஜ் என்பவரின் மனைவி ரேணுகா என்றும் வயது 24 என்றும் தெரிந்தது.












Click it and Unblock the Notifications