ஒடிஷாவில் 3 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கிராமத்தினர்
சுந்தர்கார்: ஒடிஷாவில் சூனியம் செய்வதாக சந்தேகப்பட்டு 3 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற அவலம் நடந்துள்ளது.
ஒடிஷா மாநிலம் சுந்தர்கார் மாவட்டத்தில் உள்ளது அம்பாபடா கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்கள் சூனியம் செய்வதாக உள்ளூர்காரர்கள் சிலருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சிலர் அப்பெண்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை வெளியே இழுந்து வந்து தாக்கினர். பின்னர் அந்த 3 பேரையும் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
அதன் பிறகு ஒரு கூட்டம் போட்டு அந்த 3 பெண்களும் சூனிய வேலை செய்வதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கிடையே சிலர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பெண்களையும் காப்பாற்றி இது தொடர்பாக பிரஃபுல்லா பார்லா, அனி பா மற்றும் சஞ்சம் சோரன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்துமாறு சுந்தர்கார் எஸ்.பி. போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications