வினோதினி வழக்கில் போலீசின் அலட்சியம்…!

கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி வினோதினி மீது ஆசிட் வீசிய சம்பவம் நடந்தது. ஒருதலைக்காதல் காரணமாக சுரேஷ் தான் ஆசிட் வீசினான் என்று வினோதியின் தந்தை அன்று இரவே போலீசாரிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் உடனடியாக சுரேசை கைது செய்யவில்லை. மாறாக மறுநாள் மிக தாமதமாகத்தான் அவனை கைது செய்தனர்.
தகவல் சொன்னது யார்?
தீபாவளிக்கு காரைக்கால் வந்த வினோதினி வீட்டில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும் நேரம் சுரேஷ்க்கு தெரிந்து உள்ளது. அதனால் தான் அதை எதிர்பார்த்து காத்திருந்து சுரேஷ் ஆசிட் வீசினான். சுரேசுக்கு தகவல் சொன்னவர்கள் யார்? என்பது பற்றி இதுவரை போலீசார் விசாரித்தது இல்லை.
நான்கு பேர் யார்?
வினோதினியின் மீது ஆசிட் வீசியதில் 4 பேர் சம்மந்தப்பட்டிருப்பதாக வினோதினியின் தந்தை, தாய்மாமா ஆகியோர் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனாலும் போலீசார் அதை கண்டு கொள்ளவே இல்லை.
சுரேசுக்கு ஆசிட் எப்படி கிடைத்தது? அதை விற்ற கடைக்காரர் யார்? போன்ற விவரங்களையும் சரியாக விசாரித்து வழக்கில் சேர்க்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கை போலீசார் அலட்சியமாகவே கையாண்டனர் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும்.
மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை
சுரேசின் உறவினர்கள் சிலர் வினோதினியின் தந்தை, மாமா ஆகியோரை மிரட்டியதாக தகவல்கள் வெளி வந்தன. மிரட்டியவர்கள் யார் என போலீசார் விசாரணை எதுவும் நடத்தவில்லை. இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை ஒப்பிட்டு வினோதினி செய்திகளும் பத்திரிக்கைகளில் வந்தன. அதன் பிறகுதான் ஓரளவாவது நடவடிக்கை எடுத்தனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications