சென்னையில் காதலர் தினத்தை கண்டித்து நாய்கள், கழுதைகளுக்கு திருமணம்: இந்து முன்னணியினர் ஏற்பாடு
சென்னை: காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணியினர் நாய்கள், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காதலர்கள் தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு வாழ்த்து அட்டை, பரிசுப் பொருட்கள், சாக்லேட்கள் வழங்குவார்கள். இந்நிலையில் காதலர் தினத்தன்று காதல் ஜோடிகள் அத்துமீறி நடப்பதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
புளியந்தோப்பு குட்டி தம்பிரான் தெருவில் உள்ள காந்தி சிலை அருகே இந்து முன்னணி மாநகர பொதுச் செயலாளர் எஸ்.எஸ். முருகேசன் தலைமையில் இந்து முன்னணி தொண்டர்கள் கூடினர். அவர்கள் ஒரு ஆண், ஒரு பெண் நாய்க்கு அலங்காரம் செய்து மாலை போட்டு மணமக்கள் கோலத்தில் அந்த இடத்திற்கு கொண்டு வந்தனர். அலங்கரிப்பட்ட நாய்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. பெண் நாய்க்கு மஞ்சள் கயிறு தாலி கட்டப்பட்டது. அதன் பிறகு மணமக்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது அவர்கள் காதலர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த நூதன திருமணத்தில் 100 பேர் கலந்து கொண்டனர்.
இகு குறித்து இந்து முன்னணி மாநகர பொதுச் செயலாளர் முருகேசன் கூறுகையில்,
நாங்கள் ஒன்றும் காதலுக்கு எதிரி அல்ல. காதல் என்ற பெயரில் தவறாக நடந்துகொள்கிறார்கள். இதனால் காதலின் புனிதம் கெட்டுவிட்டது. கடற்கரை, பூங்கா ஆகிய இடங்களில் காதலர்கள் தெரு நாய்கள் போல நடந்துகொள்கிறார்கள். அவர்களின் செயல் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. காதலர்களின் இந்த செயல்களால் தான் பாலியல் வன்முறை பெருகிக் கொண்டிருக்கிறது.
பெண்கள் காம கண்ணோடத்தில் பார்க்கப்படுகிறார்கள். காதலர் தினமான இன்று காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி தான் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தோம் என்றார்.
இதே போன்று கொருக்குப்பேட்டையில் காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணியினர் அதன் மாநகர தலைவர் டி. மனோகர் தலைமையில் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications