Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சவால் விட்ட கோபாலகிருஷ்ணன்... வெறியுடன் தாக்கிய வீரப்பன்.. சிதறுண்டு இறந்த 22 போலீஸார்!

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்: வீரப்பன் வேட்டையின் முக்கிய சம்பவங்களில் ஒன்றுதான் இந்த பாலாறு குண்டுவெடிப்புச் சம்பவம். காவல்துறையினரால் என்றென்றைக்கும் மறக்க முடியாத மிகப் பயங்கரமான தாக்குதல் சம்பவம் இது. வீரப்பனின் கோரமுகத்தை வெளியுலகம் பார்த்து பயந்து போன கருப்புச் சம்பவம் அது.

1993ம் ஆண்டு பாலாறு வனப்பகுதியில் வீரப்பனும் அவனது ஆட்களும் போலீஸார் 21 பேரை கூண்டோடு கொளுத்திப் போட்ட சம்பவம்தான் இது. கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி தமிழக ஐஜி கோபாலகிருஷ்ணன் படுகாயத்துடன் தப்பினார். ஆனால் அவருடன் வந்த 21 போலீஸாரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்த தினம் அது.

4 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கர்நாடக கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் அதை எதிர்த்து அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அங்கு அது தூக்குத் தண்டனையாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து நான்கு பேரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். அதைத்தான் தற்போது பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.

பாலாறு குண்டுவெடிப்பு குறித்த ஒரு ரீவைண்ட்...

வீரப்பன்... 3 மாநில போலீஸாருக்கு சிம்மசொப்பனம்

வீரப்பன்... 3 மாநில போலீஸாருக்கு சிம்மசொப்பனம்

வீரப்பனைப் பிடிக்க தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களும் மும்முரமாக இருந்த நேரம் அது. குறிப்பாக தமிழகமும், கர்நாடகமும் இணைந்து வெறியுடன் வீரப்பனைத் தேடி வந்தன.

வந்தார் கோபாலகிருஷ்ணன்

வந்தார் கோபாலகிருஷ்ணன்

இந்த நிலையில் வீரப்பனைப் பிடிக்க தமிழக அரசு அதிரடிப்படை ஒன்றை அமைத்தது. அதன் தலைவராக ஐஜி கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அப்போது அவர் எஸ்.பியாக இருந்தார்.

கோபாலகிருஷ்ணன் மீது வீரப்பனுக்கு வந்த காட்டம்

கோபாலகிருஷ்ணன் மீது வீரப்பனுக்கு வந்த காட்டம்

வீரப்பன் தேடுதல் வேட்டையில் கோபாலகிருஷ்ணன் படு தீவிரமாக இறங்கினார்.மேலும் வீரப்பனைப் பிடிக்கும் வரை திருமணமே செய்ய மாட்டேன் என்றும் சவால் விட்டார். இதனால் வீரப்பன் ஆட்களின் கொட்டம் சற்று தடைபட்டது. இதனால் வீரப்பன் படு கோபமடந்தான்.

தைரியம் இருந்தால் வா கோபாலகிருஷ்ணா

தைரியம் இருந்தால் வா கோபாலகிருஷ்ணா

இதையடுத்து 1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாளவாடி சந்தையில் ஒரு போர்டை அவனது ஆட்கள் தொங்க விட்டனர். அதில் தைரியம் இருந்தால் நேரில் வா கோபாலகிருஷ்ணா என எழுதி வைத்திருந்தான்.

பாலாறு பகுதியில் பதுங்கியதாக தகவல்

பாலாறு பகுதியில் பதுங்கியதாக தகவல்

வீரப்பனின் இந்த சவாலால் கோபமடைந்த போலீஸார் தேடுதல் வேட்டையை மேலும் தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் பாலாறு வனப் பகுதியில், வீரப்பன் தனது ஆட்களுடன் பதுங்கியிருப்பதாக இன்பார்மர்கள் மூலம் கோபாலகிருஷ்ணனுக்குத் தகவல் கிடைத்தது.

கண்ணிவெடித் தாக்குதல்

கண்ணிவெடித் தாக்குதல்

இதையடுத்து கோபாலகிருஷ்ணன் தலைமையில் தமிழக அதிரடிப்படையினரும், அதேபோல கர்நாடக அதிரடிப்படையினரும் விரைந்தனர். அப்போது, தமிழக போலீஸார் சென்ற 2 வாகனமும் பழுதானது. இதையடுத்து கர்நாடக அதிரடிப்படையை சேர்ந்த போலீஸ் வேனில் 5 போலீசார், 4 வாட்சர், 13 போலீஸ் இன்பார்மர்கள் ஏறினர். தமிழ்நாடு, கர்நாடக எல்லைப்பகுதியான பாலாறு, சுரக்காமடுவு என்ற இடத்தில் வேன் சென்றபோது, அங்கு பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடியை வீரப்பன் கூட்டாளிகள் வெடிக்க வைத்தனர். இதில் போலீஸ் வேன் சுக்கு நூறாக வெடித்து சிதறியது.

22 பேர் உடல் சிதறி பலி

22 பேர் உடல் சிதறி பலி

இந்த கோரத் தாக்குதலில் கோபாலகிருஷ்ணன் படுகாயமடைந்தார். மற்ற 22 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

கமிஷனராக ஓய்வு பெற்ற கோபாலகிருஷ்ணன்

கமிஷனராக ஓய்வு பெற்ற கோபாலகிருஷ்ணன்

அப்போது முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அவர் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபாலகிருஷ்ணனை நேரில் வந்து பார்வையிட்டு ஆறுதல் கூறினார். கோபாலகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். பின்னர் சேலம் மாநகர காவல்துறை ஆணையராக பணியாற்றி பணியிலிருந்து ஓய்வு பெற்றார் கோபாலகிருஷ்ணன்.

முக்கியக் குற்றவாளி மீசை மாதையன்

முக்கியக் குற்றவாளி மீசை மாதையன்

பாலாறு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளி வீரப்பன்தான் என்ற போதிலும் மீசை மாதையன்தான் அதில் முக்கியப் பங்காற்றினார். அவரோடு பிலவேந்திரன், ஞானப்பிரகாசம், சைமன் ஆகியோரும் பங்காற்றினர். இவர்களுக்கு எதிராக கோபாலகிருஷ்ணன் கொடுத்த வாக்குமூலத்தால்தான் நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை கிடைத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+