நாளை முதல் 2 நாள் ஸ்டிரைக்: தமிழகத்தில் பஸ், ரயில்கள் ஓடும்; ஆட்டோக்கள் ஓடுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் சென்னையில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்துகொள்வதால் ஆட்டோக்கள் ஓடாது என்று கூறப்படுகிறது. ஆனால் அரசு பேருந்துகள் மற்றும் ரயில்கள் வழக்கம்போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு, தனியார் மயமாக்குதல், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மற்றும் நாளை மறுநாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., யூ.டி.யூ.சி. உள்ளிட்ட 11 வர்த்தக சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

Two-day trade unions strike to hit life

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் சம்மேளனம், இன்சூரன்ஸ், தபால் துறை, கலால், வருமான வரித்துறை, சுங்கத் துறை, கப்பல், பாதுகாப்பு துறை, மத்திய கணக்கு துறை, தொலைதொடர்புத் துறை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கள் பங்கேற்கின்றன. இந்நிலையில் வேலைநிறுத்தத்தை கைவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக தொழிற்சங்க தலைவர்களுடன் அமைச்சர்கள் குழு நேற்று இரவு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்கவும், ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து 75,000 வங்கி ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். மேலும் நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதால் வங்கி சேவைகள் முற்றிலும் பாதிக்கப்படும்.

சாஸ்திரி பவன், ராஜாஜி பவன் ஊழியர்கள், கல்பாக்கம் அணு மின் நிலைய ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர். சென்னையில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்ததில் பங்கேற்கவிருப்பதால் தலைநகரில் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 70,000 ஆட்டோக்கள் ஓடுகின்றன. இதில் ஒரு சில தொழிற்சங்கங்களைத் தவிர மற்றவை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் ஆட்டோக்கள் ஓடாது என்று சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் சவுந்தர்ராஜன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பேருந்து, ஆட்டோ சேவை பாதிக்கப்படும். கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் சுமார் 1 லட்சம் பேர் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர் என்றார்.

தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் கூறுகையில்,

15 லட்சம் தொழிலாளர்களைக் கொண்ட தொமுச இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறது. எங்களை் உரிமையைக் காக்க எந்த இழப்பையும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என்றார்.

அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி தலைவர் சத்தியசீலன் கூறுகையில்,

இந்த வேலைநிறுத்தத்தில் எங்கள் சங்கம் கலந்துகொள்ளாது. ஆனால் போராட்டத்தில் பங்கேற்கவிருப்பதாக காங்கிரஸின் துணை அமைப்பான ஐ.என்.டியூ.சி. அறிவித்துள்ளது. இதனால் அதன் நிர்வாகிகளை உடனே மாற்றும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நேரில் கோரிக்கை வைப்போம் என்றார்.

2 நாள் வேலைநிறுத்ததத்தால் பொதுமக்களுக்கு பால், குடிநீர், உணவு, மருந்துப் பொருட்கள் எடுத்துச் செல்வதில் எவ்வித தடையும் ஏற்படாமல் இருக்க வேண்டம் என்பதில் அரசு முனைப்பாக உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களை மறித்தாலோ, சேதப்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழக பேருந்துகளை நாளையும், மறுநாளும் இயக்க அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் நாளை ஓடும். அதனால் பொதுமக்கள் தைரியமாக பயணம் செய்யலாம் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாளை சென்னையில் அனைத்து பேருந்துகளும் ஓடும். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ரயில் ஊழியர்கள் கலந்துகொள்ளாததால் அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயங்கும். சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து பகல் மற்றும் இரவு நேரத்தில் செல்லும் அனைத்து ரயில்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+