For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசிய திமுக பெண் நிர்வாகி- தடுத்து நிறுத்திய கனிமொழி

Google Oneindia Tamil News

MP Kanimozhi
நெல்லை: முதல்வர் ஜெயலலிதாவை பற்றி திமுக நிர்வாகி ஒருவர் மிகவும் தரக்குறைவாக பேசியபோது அதை உடனே நிறுத்த உத்தரவிட்டார் திமுக எம்.பி. கனிமொழி.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலியில் உள்ள புனித சேவியர் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட எம்.பி. நிதியில் இருந்து ரூ.25 லட்சத்தை திமுக எம்.பி. கனிமொழி வழங்கினார். மேலும், இந்த விழாவிற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் கலந்து கொண்டார்.

அப்போது அந்த விழாவில் பேசிய திமுக மகளிர் அணியைச் சேர்ந்த சீனியம்மாள் என்பவர், முதல்வர் ஜெயலலிதாவை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசினார். நாகரீகம் அற்ற சொற்களை பயன்படுத்தியும் உள்ளார். இன்னும் சொல்லப்போனால் அருவருக்கத்தக்க வகையில் அவரது பேச்சு அமைந்தது.

உடனே கனிமொழி சீனியம்மாளின் பேச்சுக்கு தடை போட்டார். இதையடுத்து அவர் தனது பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றார்.

கனிமொழி திமுகவைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு பெண்ணை, அதுவும் முதல்வராக உள்ள ஒரு பெண்மணியை, நாகரீகம் அற்ற வார்த்தைகளில் தனது முன்னிலையில் பேசியதை பொறுக்க முடியாமல் தனது கட்சியினருக்கு நாகரீகமாக நடந்து கொள்ள உத்தரவிட்டது அவருக்கு கூடுதல் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தது.

English summary
When a DMK cadre verbally abused CM Jayalalithaa at a function in Tirunelveli, MP Kanimozhi stopped her from talking ill of her father's arch rival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X