புனே பாணியில் ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு

புனே குண்டு வெடிப்பு
நாட்டின் புதிய உள்துறை அமைச்சராக சுஷில்குமார் ஷிண்டே பொறுப்பேற்ற நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனே நகரில் இதேபோல் மக்கள் கூடும் இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. புனே குண்டுவெடிப்பும் சுமார் 7.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை நடைபெற்றது. இதில் 9 பேர் பலியாகி இருந்தனர். இந்த சம்பவத்தில் இந்திய முஜாஹிதீன்கள் அமைப்பு தொடர்பிருக்கலாம் என்று கூறப்பட்ட அதே நேரத்தில் இந்துத்துவா சக்திகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்புடைய தயானந்த பாட்டீல் என்பவரது சைக்கிள் கடையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட சைக்கிளில்தான் குண்டுகள் வெடித்ததாகக் கூறப்பட்டது.
பின்னர் இந்திய முஜாஹிதீன்கள் அமைப்பினர்தான் காரணம் என்று கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தங்களை சிறப்பு அதிரடிப்படையினர் சித்திரவதை செய்வதாகவும் புனே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் கூறியிருந்தனர்.
புனே பாணியில் குண்டு வெடிப்பு
இதனிடையே புனே குண்டுவெடிப்பு வழக்கில் இன்று மாலைதான் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே புனே பாணியிலான குண்டுவெடிப்பு சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. புனேயில் நிகழ்த்தியதைப் போலவே மக்கள் கூடுமிடங்களில் இரவு 7 மணி முதல் 7.15 வரையில் குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டிருக்கின்றன. மோட்டார் சைக்கிளில் இருந்து வெடிக்காத குண்ட் ஒன்றும் கண்டு எடுக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications