ரோட்டோரமாக உள்ள 1400 டாஸ்மாக் கடைகளை அகற்ற நோட்டீஸ்
நெல்லை: தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 1400 டாஸ்மாக் கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் டாஸ்மாக் நிர்வாக்ததின் கீழ் 6800 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 35 பேர் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், பார் உதவியாளர்கள் என பணிபுரிந்து வருகின்றனர்.
இக்கடைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வருவாயின் அளவு அதிகரித்து வந்தது. இந்த நிதியாண்டில் ஜனவரி மாதம் முடிவுடன் ரூ.21 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. இந்த வருவாய் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியவர்களால் விபத்து அதிகம் நடந்து வருகிறது. இதனால் உயிர் பலி ஏற்படுவதுடன் ஏராளமான குடும்பங்கள் நிர்கதியாகும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள1400 கடைகளை வேறு இடத்திற்கு மாற்றி நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ரூ.10375 தான் சம்பளம்: டாஸ்மாக் ஊழியர் அமைச்சர் முஸ்தபாவிடம் பேசிய வீடியோ.. எதார்த்தம் என்ன -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications