ஓடும் பஸ்சிலிருந்து கீழே இழுத்து இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை
நெல்லை: நெல்லையில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஓடும் பஸ்சில் இருந்து கீழே தள்ளி படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகேயுள்ள பக்கபட்டியை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் திவாகர். இவர் ராமையன்பட்டி அருகேயுள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் கல்லூரி முடிந்து நெல்லை சந்திப்புக்கு வந்தார். அங்கிருந்து ஆழ்வார்கற்குளம் செல்லும் தனியார் பஸ்சில் முன்சீட்டில் அமர்ந்து ஊருக்கு சென்றார்.
அப்போது பாளை கேடிசி நகரில் இருந்து பஸ்சை ஒரு கார் பின் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் அரியகுளம் அருகேயுள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இருவர் இறங்கினர். அப்போது காரில் பின் தொடர்ந்த கும்பல் ஒரு மாணவரை பஸ்சில் இருந்து இழுத்து போட்டு அரிவாளால் சராமரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர் இறந்தார்.
இதையடுத்து டிரைவர் பஸ்சை அங்கிருந்து வேகமாக எடுத்து சென்று விட்டார். சம்பவ இடத்திற்கு ஏடிஎஸ்பி மகேந்திரன், டிஎஸ்பி நடராஜன், இன்ஸ்பெக்டர்கள் சோனமுத்து, பிரகாஷ், சாகுல் கமீது, சுகுமார் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் போலீசார் மாணவரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications