For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் டெசோ மாநாடு- பாஜகவை அழைக்கிறது திமுக! கழற்றிவிடப்படுவதால் காங். அதிர்ச்சி!

By Mathi
Google Oneindia Tamil News

Karunanidhi
டெல்லி: தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) சார்பில் டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியைப் புறக்கணித்துவிட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுக்க திமுக திட்டமிட்டிருக்கிறது.

டெல்லியில் வரும் 7-ந் தேதி டெசோ அமைப்பின் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பா.ஜ. க தலைவர்களான அத்வானி, சுஷ்மா சுவராஜ், யஷ்வந்த் சின்கா, மத்திய அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, சரத்பவார், முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலைவர்களையும் அழைக்க திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால் காங்கிரஸை புறக்கணிக்கவும் திமுக முடிவு செய்திருக்கிறது.

இது தொடர்பாக நாளை சென்னையில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பாலச்சந்திரன் படுகொலை குறித்தும் விவாதித்து புதிய தீர்மானம் நிறைவேற்றப்படலாம்.

திமுகவின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்திருக்கும் காங்கிரஸ் மேலிடம், டெசோவின் பெயரால் லோக்சபா தேர்தலுக்கான ஒரு கூட்டணியை மறைமுகமாக கருணாநிதி உருவாக்குகிறாரோ என்றும் சந்தேகிப்பதாகக் கூறப்படுகிறது.

English summary
DMK plans to invite BJP for its TESO meet which will held March 7 at Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X