ஹைதராபாத்தில் மீண்டும் குண்டுவெடிக்கும்: பாஜக தலைவருக்கு லஷ்கர் இ தொய்பா மிரட்டல் கடிதம்
ஹைதராபாத்: ஹைராபாத்தில் விரைவில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று ஆந்திர மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டிக்கு லஷ்கர் இ தொய்பா பெயரில் வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் குண்டுவெடிப்புகள் நடந்த அதிர்ச்சியில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் ஹைதராபாத்தில் விரைவில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என்று ஆந்திர மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டிக்கு கடந்த சனிக்கிழமை கடிதம் ஒன்று வந்துள்ளது. அது பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் பெயரில் வந்துள்ளது.
இது குறித்து ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அடுத்து பேகம் பஜாரை தாக்கப் போவதாக லஷ்கர் இ தொய்பா தெரிவித்துள்ளது. இந்த கடிதம் கிடைத்த உடனே நான் அபிட்ஸ் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தேன். இது உண்மையா பொய்யா என்பதைவிட மேலும் தாக்குதல்கள் நடக்காமல் தடுப்பதே முக்கியம்.
விசா முடிந்தும் ஆந்திராவில் தங்கியிருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம், பர்மா, சோமாலியா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களை மாநில அரசு உடனடியாக அடையாளம் கண்டு அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும். ஹைதராபாத் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை அளிப்பதுடன் அவர்களுக்கு சொந்த வீடு இல்லாமல் இருந்தால் ராஜீவ் ஸ்வக்ருஹா திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க வேண்டும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications