ஜெ.வுடன் சாலையில் பேசியதை வைத்து கூட்டணி என்று சொல்லக் கூடாது - வைகோ
காஞ்சிபுரம்: முதல்வர் ஜெயலலிதா, எனது நடை பயணத்தின்போது காரை நிறுத்தி என்னை சந்தித்துப் பேசியது உயரியஅரசியல் நாகரீகமாகும். இதை வைத்து கூட்டணி என்று பேச்சு எழுந்துள்ளது. இது அந்த அரசியல் நாகரீக சந்திப்பை கொச்சைப்படுத்துவதாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். காஞ்சிபுரத்துக்கு சனிக்கிழமை இரவு அவர் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு தொண்டர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது இலக்கு பூரண மதுவிலக்கு. அதை அடையும் வரை தொடர்ந்து போராடுவோம், வெற்றி காண்போம். பையனூர் அருகே நடைப்பயணத்தின்போது அவ்வழியே காரில் சென்ற முதல்வர் ஜெயலலிதா என்னை சந்தித்து நலம் விசாரித்தார். ஆனால் சில மீடியாக்கள் இதை பெரிதுபடுத்தி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - மதிமுக கூட்டணி எனக் கூறுகின்றனர்.
முதல்வர் என்னை சந்தித்தது திட்டமிட்டது அல்ல. அரசியல் நாகரிகத்தில் என்னிடம் நலம் விசாரித்தார். இது எனக்கு மிகவும் சந்தோஷம். இதை கொச்சைப்படுத்த வேண்டாம். இதில் வேறு எதுவும் இல்லை என்றார் வைகோ.

-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications