தொலைந்த வைர மோதிரத்தை உரியவரிடம் சேர்த்த உத்தமர்..
வாஷிங்டன்: நேர்மைதான் மிகப்பெரிய அணிகலன் என்பார்கள். இருப்பதற்கு இடமில்லை என்று தெரிந்தும் விலை உயர்ந்த வைரமோதிரத்தை கண்டெடுத்த ஒரு மனிதர் அதை உரியவரிடம் சேர்த்து இன்னமும் இன்னமும் இந்த காலத்தில் நேர்மையான மனிதர்கள் இருக்கின்றனர் என்று நிரூபித்துள்ளார்.
அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தில் உள்ள கான்சாஸ் நகரத்தில் வசித்து வருபவர் சாரா டார்லிங். இவர் தன்னுடைய விலை உயர்ந்த வைர மோதிரத்தை தொலைத்துவிட்டார்.
சாரா வசிக்கும் நகரத்தில் பாலத்திற்கு அடியில் வசிக்கும் பில்லி ராய் ஹாரீஸ் என்பவர் கையில் அந்த மோதிரம் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த மோதிரத்தை உரியவரான சாரா டார்லிங் வசம் ஒப்படைத்துவிட்டார் ஹாரீஸ்.
தொலைந்து போன விலை உயர்ந்த மோதிரம் திரும்ப கிடைத்த சந்தோசத்தில் கண்ணீர் மல்க நன்றி கூறினார் டார்லிங். நான் மிகவும் நேசித்த ஒருபொருள் தனக்கு திரும்ப கிடைத்துவிட்டது. இதற்கு என்னுடைய பூர்வ ஜென்ம புண்ணியம்தான் என்று கூறியுள்ளார் டார்லிங்.
மோதிரத்தை திரும்ப கொடுத்த ஹாரிஸ்க்கு, தனது கணவருடன் சென்று நன்றி கூறிய சாரா, விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும் வழங்கியுள்ளார்.
இருப்பதற்கு இடம் இல்லை என்றாலும் நேர்மையாக நடந்து கொண்ட ஹாரீஸ் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications