2வது பதவிக்காலம் முடிந்ததும் ஓய்வு... கியூப அதிபர் ரவுல் கேஸ்ட்ரோ அறிவிப்பு
கியூபா: கியூபாவின் அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவுல் கேஸ்ட்ரோ, தனது ஐந்தாண்டு கால ஆட்சி முடிந்தவுடன் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.
கியூப புரட்சிக்குப் பின்னர் 1959-ம் ஆண்டு முதல் கியூபாவை கேஸ்ட்ரோ சகோதரர்கள் ஆண்டு வருகின்றனர். உடல்நலக் குறைவால் கியூபா அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ ஓய்வு பெற்ற பின்னர் அவரது சகோதரரான ரவுல் காஸ்ட்ரோ அதிபராகப் பொறுப்பேற்றார்.
இரண்டாவது முறையாக அதிபராக தேர்தெடுக்கப்பட்டபின் முதல்முறையாக கூடிய நாடாளுமன்ற கூட்டத்திற்குப்பிறகு, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் முக்கிய முடிவு ஒன்றினை அறிவித்துள்ளார். அதாவது தனது ஐந்தாண்டு கால ஆட்சி முடிந்தவுடன் ஓய்வுபெறப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
கியூபாவின் புதிய துணை அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டியாஸ் கேனல் தம்மோடு இணைந்து மக்களுக்காக சிறந்த முறையில் பணியாற்றுவார் என்றும் ரவுல் அறிவித்தார்.
அண்மையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற கியூபாவுக்கு வந்த வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் சிகிச்சை பெற, ரவுல் கேஸ்ட்ரோ எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications