ரயில்வே பட்ஜெட் 2013-14 - தாக்கல் செய்தார் பன்சால்- 18 ஆண்டுக்குப் பின் முதல் காங். பட்ஜெட்
டெல்லி 2013-14ம் ஆண்டுக்கான ரயில்வேபட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார்.
இது பன்சாலுக்கு முதல் பட்ஜெட்டாகும். அதேசமயம், காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் 18 ஆண்டுகள் கழித்து ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்.
இதுவரை தனது கூட்டணிக் கட்சிகளுக்கே ரயில்வே துறையை ஒதுக்கி வந்தது காங்கிரஸ். சமீபத்தில் திரினமூல் காங்கிரஸிடமிருந்து இத்துறையை மீ்ண்டும் தன் வசம் கொண்டு வந்தது என்பது நினைவிருக்கலாம்.

கடந்த 1994ம் வருடத்துக்குப் காங்கிரஸ் கட்சி ரயில்வே துறையை வகிக்கவில்லை. இப்போதுதான் கைக்கு வந்துள்ளது. அதுவும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வே அமைச்சகம் மாநிலக் கட்சியின் பிடியில் இல்லாமல் இப்போது தேசியக் கட்சியின் கட்டுக்குள் வந்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் இன்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் ரயில்வேத் துறை அமைச்சராக பவன்குமார் பன்சால் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற உடனேயே, ரயில்வேத் துறையில் கூடுதல் வருமானத்தைப் பெருக்க, திடீர் கட்டண உயர்வை அறிவித்தார்.
இது பட்ஜெட்டில் இல்லாமல் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு என்பது குறிப்பிடத் தக்கது. அதற்கு 10 வருடங்களாக ரயில்வே பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று காரணம் கூறப்பட்டது. இவ்வாறு பயணிகள் கட்டணம் சுமார் 21 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. இதன்மூலம் ரூ.6,600 கோடிக்கு கூடுதல் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications