டெல்லி வந்த ரயிலில் சீட்டுக்கு அடியில் பிளாஸ்டிக் பையில் பெண் பிணம்: போலீசார் விசாரணை
டெல்லி: ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு வந்த ரயிலில் பிளாஸ்டிக் பையில் பெண் ஒருவரின் பிணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஹரியானா மாநிலம் பானிபட்டில் இருந்து கிளம்பிய பயணிகள் ரயில் நேற்று முன்தினம் இரவு டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்தது. பிளாட்பாரம் எண் 9ல் வந்து நின்ற அந்த ரயிலில் மரத்தாலான இருக்கைக்கு அடியில் ஒரு பெரிய வெள்ளை நிற பிளாஸ்டிக் பை இருந்தது. இதை பார்த்த ரயில் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் வந்து பையைத் திறந்தபோது அதற்குள் நீல நிற பிளாஸ்டிக் பை இருந்தது. அந்த பையில் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் இருந்தது. அந்த பெண் பிரவுன் கலர் சல்வார் அணிந்திருந்தார். அவரது கை, கால்கள், கழுத்து பச்சை நிற பிளாஸ்டிக் கயிறால் கட்டப்பட்டிருந்தது. அந்த பெண்ணின் உடல் நாயக் மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணின் புகைப்படத்தை நகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகளை தொடர்பு கொண்டு விசாரிக்கவும் முயன்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
-
CJP Protest LIVE: “கல்வி அமைச்சரே ராஜனாமா செய்..” ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் கோஷம் -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications