இலங்கை: யுஎஸ் தீர்மானம் கொண்டு வருகிறது.. இந்தியா என்ன செய்கிறது?: டி. ராஜா

ராஜ்யசபாவில் இன்று நடைபெற்ற இலங்கை போர்க் குற்றம் தொடர்பான சிறப்பு விவாதத்தில் பேசிய அவர், இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு மாற வேண்டும். இலங்கையில் போர் முடிவுற்ற பின்னரும் திட்டமிட்டபடியான தமிழர் இனப்படுகொலை தொடர்கிறது.
இலங்கையுடன் நட்பு பாராட்டுகிற இந்திய அரசு மனசாட்சியோ பதில் சொல்லட்டும்.. தமிழர் இனப்படுகொலைக்கு உதவுகிறீர்களா? கடந்த ஆண்டு ஜெனிவா தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னர் இலங்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. யாழ்ப்பாண மாணவர்கள் எவ்வித காரணமுமின்றி கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஊடகங்கள் ஒடுக்கப்பட்டிருக்கின்றன.
இலங்கையின் சுதந்திர திஅன் விழாவில் பேசிய ராஜபக்சே, தமிழர்களுக்கு சுயாட்சி கிடையாது என்கிறார். ஆனால் நீங்களோ 13-வது அரசியல் திருத்தம் பற்றி பேசுகிறீர்கள்.. எதற்காக நீங்கள் தமிழர்களை ஏமாற்றுகிறீர்கள்? இந்தியா 13-வது அரசியல் திருத்தம் என்று பேசுவதே ஏமாற்று வேலை.
இலங்கையில் ராணுவத்தால் பெண்கள் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். அந்த நாட்டில் புத்தர் சிரிக்கவில்லை. ரத்தக்கண்ணீர் வடிக்கிறார். இந்தியாவால் கட்டிக் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிற வீடுகள் தமிழர்களுக்காக கிடைத்திருக்கிறது?
தமிழர் பாரம்பரியாக வாழும் பகுதிகளில் ராணுவ ஆக்கிரமிப்பு அதிகரிக்கிறது.. தொடர்கிறது.. தமிழரின் நிலங்கள், வீடுகள் பறிக்கப்பட்டு தமிழரின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர் தேவாலயங்கள் அழிக்கப்பட்டு, கோயில்கள் நிர்மூலமாக்கப்பட்டு வருகின்றன.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருகிறது.. அதை இந்தியா ஆதரிக்கிறது.. இது மிகப் பெரிய அவமானமாகும். இலங்கைக்கு எதிராக என்னுடைய இந்தியா என்ன செய்தது? என்ற கேள்விக்கு பதில் இல்லை.
ஈழத் தமிழர்களை கைவிட்டுவிட்டது இந்தியா. இந்திய அரசு இலங்கை மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றார் அவர்.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications