இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்: மனித உரிமைகள் அமைப்பு

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு நேற்று 140 பக்க அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
2006-2012 ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட தமிழ்ப் பெண்களை இலங்கை ராணுவத்தினர் கொடுமைபடுத்தியது குறித்து ஆய்வு செய்தோம். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகள் பற்றிய விவரங்களை அறிய சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட, கைது செய்யப்பட்ட பெண்கள் மீது இலங்கை ராணுவத்தினரும், போலீசாரும் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றனர்.
தமிழ் பெண்கள் 75 பேரிடம் இலங்கை ராணுவம் பாலியல் துஷ்பிரோயகம் செய்தது குறித்த மருத்துவ அறிக்கை சான்றுகளுடன் பட்டியிலிட்டு இருக்கிறோம். விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கைதுசெய்யப்பட்டு கொடுமைபடுத்தப்பட்ட 31 ஆண்கள், 41 பெண்கள், 18 வயதிற்கு உட்பட்ட 3 சிறுவர்கள் பற்றிய விவரங்களையும் பட்டியலிட்டு இருக்கிறோம்.
2009-ம் ஆண்டு சரண் அடைந்த ஒரு விடுதலைப்புலியின் ஆண் உறுப்பில் இரும்பு தகடுகளும், இரும்பு பால்ரஸ் குண்டுகளும் சொருகப்பட்டுள்ளன. பின்னர் அவர் அங்கிருந்து தப்பித்து வந்து, வெளி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றியுள்ளார். 17 வயது சிறுவன் ஒருவன் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டு அடித்து தலைகீழாக தொங்கவிடப்பட்டுள்ளார்.
இந்த மனித உரிமை மீறல்களுக்கான மருத்துவ அறிக்கை சான்றுகள் உள்ளன. மேலும் அங்கு தற்பொழுது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளவர்களின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. இன்னும் நிறைய உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டியுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்திலும் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications