தூத்துக்குடி: சோனியா, ராஜபக்சே உருவ பொம்மை எரித்த நாம் தமிழர் கட்சியினர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் சோனியா, காந்தி, ராஜபக்சே உருவபொம்மைகளை எரித்த நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
இலங்கை தமிழர் படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவை கண்டித்தும், ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபு, மாவட்ட தலைவர் இசக்கிதுரை, இளைஞரணி செயலாளர் வேல்ராஜ், ஜெயசீலன், தமிழினியன், பட்டாணி, லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது ராஜபக்சே, சோனியாகாந்தி, கருணாநிதி உருவபொம்மை களை தீ வைத்து எரித்து இலங்கைக்கு எதிராகவும்,மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர் . இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஏ.எஸ்.பி.மகேஷ் தலைமையிலான போலீசார் உருவ பொம்மைகள் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications