மார்ச் 31 முதல் சென்னை – பெங்களூர் டபுள் டக்கர் ரயில் இயக்கம்?
சென்னை: சென்னை - பெங்களூர் இடையே டபுள்டக்கர் மாடி ரயில் மார்ச் 31 முதல் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இரண்டு முறை சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளதை அடுத்து ரயில்வே அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
டபுள்டக்கர் சொகுசு ரெயில் வேகம் மற்ற ரெயில்களை விட அதிகமாகும். இந்த ரெயில் சோதனை ஓட்டமாக பெங்களூருக்கு இயக்கப்பட்டது. முதல் முறை நடந்த சோதனை ஓட்டத்தில் சில குறைபாடுகள் தெரிய வந்தன.
இதையடுத்து அவற்றை நிவர்த்தி செய்து 2-வது முறையாக பெங்களூருக்கு இன்று மீண்டும் இயக்கப்பட்டது. அந்த ரெயில் இன்று சென்ட்ரல் நிலையத்திற்கு வந்தது. 2 கட்ட சோதனையின் போதும் பல்வேறு குறைகள் சரி செய்யப்பட வேண்டும் என்று தொழில்நுட்ப துறையினர் எடுத்து கூறினர்.

மாடி ரெயில் இயக்கப்படு வதற்கான தகுதி உறுதிச் சான்றினை அதிகாரி வழங்கிய பிறகு அந்த ரெயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். இன்னும் 2 வாரத்தில் இதற்கான தேதி முடிவு செய்யப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குளு குளு வசதி மாடி ரயில்
டபுள் டக்கர் ரயிலில் கீழ் பகுதியாகவும், மாடிப் பகுதியாகவும் பிரித்து இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. முற்றிலும் உட்கார்ந்து செல்லக்கூடிய (சேர்கார்) வகையில் இந்த பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டியில் 120 பயணிகள் பயணம் செய்யும் வசதி உள்ளது. இந்த ரெயிலில் அனைத்து பெட்டிகளும் குளு குளு வசதி செய்யப்பட்டுள்ளது.
மற்ற சேர்காரில் 72 பேர் மட்டுமே பயணம் செய்யலாம். இந்த ரெயிலில் 11 பெட்டிகள் மூலம் மொத்தம் 1320 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கலாம். பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications