சேவை வரி எதிரொலி: சென்னை மால்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
சென்னை: மத்திய அரசின் பட் ஜெட்டில் பார்க்கிங் ஏரியாவுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு சேவை வரி புதிதாக விதிக்கப்பட்டுள்ளது. 12.36 சதவீத சேவை வரி விதிக்கப்பட்டு இருப்பதால் அனைத்து மால்களிலும் பார்க்கிங் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மும்பை, கொல்கத்தா, டெல்லி போல சென்னையிலும் இப்போது பல அடுக்கு வணிக வளாகங்கள் உருவாகி வருகின்றன. சினிமா தியேட்டர், சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளிட்ட பொழுது அம்சங்கள் நிறைந்த மால்களை பொது மக்கள் தற்போது அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.
குடும்பத்துடன் சென்று சில மணி நேரம் ஜாலியாக குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்து வரும் கலாசாரம் பெருகி வருகிறது. பொழுது போக்கிற்காக செல்லக்கூடிய மக்கள் அங்கேயே தங்களுக்கு தேவையான பொருட்களையும் கொள்முதல் செய்யும் வசதி ஷாப்பிங் மாலில் உள்ளது. சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் இத்தகைய மால்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்த மால்களுக்கு வரும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் என்று நிர்வாகம் வசூலித்து வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு கார்களுக்கு ரூ.40, ரூ.50 வீதமும் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 வீதமும் வசூலித்து வருகின்றனர். 2 மணி நேரம், 3 மணி நேரம் என்ற அளவில் கட்டணம் நிர்ணயம் செய்து ஷாப்பிங் மால்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
மத்திய அரசின் பட் ஜெட்டில் பார்க்கிங் ஏரியாவுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு புதியதாக 12.36 சதவீத சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷாப்பிங் மால்கள் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இனி இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10க்கு பதிலாக 11 ரூபாயாகவும், 40 ரூபாய் கட்டணம், 44 ரூபாய் ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த கூடுதல் கட்டண உயர்வு குறித்து கருத்து கூறிய மால் நிர்வாகிகள், கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது தங்களுக்கு கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனால் சேவை வரி விதிக்கப்பட்டதால் வேறு வழி இல்லை என கூறுகின்றனர்.
பார்க்கிங் கட்டணத்திற்கு சேவை வரி விதிக்கப்பட்டதன் மூலம் ஷாப்பிங் மால்கள் மட்டுமல்லாது பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் அனைத்து இடங்களிலும் கட்டணம் உயரும் வாய்ப்புள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications