ஈராக்கில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 22 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்: ஈராக்கில் ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட குண்டுவெடிப்புகளில் 22 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா மக்கள் அதிகம் வாழும் குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்புகளில் 18 பேர் பலியாகினர். சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
பாக்தாத் அருகே உள்ள அஃஜிஃஜியாஹ் நகரில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 4 பேர் பலியாயினர்.10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த குண்டு வெடிப்புகளுக்கு அல்கொய்தா ஆதரவு பெற்ற ஈராக் சன்னி முஸ்லிம் இயக்கம் காரணமாக இருக்கக் கூடும் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications