போரூரில் வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமியை கத்தி முனையில் கற்பழித்த ஆட்டோ டிரைவர்
சென்னை: போரூரில் வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமியை கத்தி முனையில் கற்பழித்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா என்பவரின் தங்கை மாலா(10) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தாய், தந்தை இல்லாத அவர்கள் போரூரில் உள்ள லட்சுமி நகரில் வசித்து வருகின்றனர். வீட்டு வேலை செய்து தங்கையை படிக்க வைத்து வருகிறார் விஜயா. மாலா பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.
அவர்கள் தங்கியிருக்கும் வீட்டு மாடியில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தது. இதற்காக கடந்த சில நாட்களாக மணல், ஜல்லி என்று கட்டுமானப் பொருட்கள் வந்து இறங்கின. நேற்று காலை விஜயா வீட்டு வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது மாலா மட்டும் வீட்டில் இருந்தார். அந்நேரம் கட்டுமானப் பொருட்களை ஏற்றிக் கொண்டு லோடு ஆட்டோ டிரைவர் மதுரவாயலைச் சேர்ந்த மகாதேவன்(34) அங்கு வந்தார். பொருட்களை இறக்கி வைக்கையில் அவர் மாலா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு சிறுமியிடம் நைசாகப் பேசினார்.
அவர் சிறுமியிடம் குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டார். மாலா வீட்டுக்குள் சென்றபோது அவர் உள்ளே சென்று கதவை பூட்டினார். பின்னர் கத்தி முனையில் மாலாவை கற்பழித்தார். இதை யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என்று மிரட்டிவிட்டுச் சென்றார். மாலை வீடு திரும்பிய விஜயா தனது தங்கை அழுது கொண்டிருப்பதைப் பார்த்து காரணம் கேட்டார். அப்போது தான் மாலா கற்பழிக்கப்பட்டது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து போரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மகாதேவனை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications