காதலிக்காவிட்டால் ஆசிட் வீசுவேன்: 10ம் வகுப்பு மாணவியை மிரட்டிய வாலிபர் கைது
நெல்லை: நெல்லை அருகே காதலிக்க மறுத்த மாணவி மீது ஆசிட் வீசிக் கொன்று விடுவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா. இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். பாப்பாக்குடி அருகே உள்ள புதுகிராமத்தைச் சேர்ந்த சிவனு பாண்டி மகன் சுவாமிநாதன். இவரும் மாணவியும் உறவினர்கள் ஆவர். சுவாமிநாதன் சித்ராவை ஒரு தலையாக காதலித்து வந்தார். கடந்த சில மாதங்களாக மாணவி பின்னால் தினமும் சுற்றி வந்தார். எவ்வளவு கண்டித்தும் அவர் கேட்காததால் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார் சித்ரா. இதையடுத்து அவர்கள் சுவாமிநாதனை அழைத்து கண்டித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரை வழிமறித்து நீ என்னை காதலிக்காவிட்டால் உன் முகத்தில் ஆசிட் வீசிக் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அழுதவாறு நடந்த விபரத்தை பெற்றோரிடம் தெரிவித்தார். இது குறித்து அவரது தந்தை முக்கூடல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிபின் ராஜ்மோகன் மற்றும் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், கிண்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சுவாமிநாதன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications