கேரளாவில் 2 மகள்களை ரூ.20 லட்சத்திற்கு விற்க முயன்ற கோவில் அர்ச்சகர்
கொல்லம்: கேரளாவில் தன்னுடைய 2 மகள்களை ரூ. 20 லட்சத்திற்கு விற்க முயன்ற அர்ச்சகரை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள உருக்குன்னு கிராமத்தைச் சேர்ந்தவர் சஜி போற்றி(38). அர்ச்சகர். அவருடைய மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து சஜி தன்னுடைய 12 மற்றும் 9 வயது மகள்களை தன்னுடனே வைத்துக் கொண்டார். இந்நிலையில் சஜி கண்ணூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையே முதல் மனையின் தாயார் சஜி பற்றி தென்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
என் மகளின் கணவரான சஜி போற்றி சமீபத்தில் வீட்டின் அருகே உள்ள உணவகத்தில், டெல்லியைச் சேர்ந்த நபரிடம் தன் இரு மகள்களையும் விற்பதற்காக பேரம் பேசியுள்ளார்.
அந்த நபரிடம் இரு மகள்களையும் காண்பித்துள்ளார். இருவரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று 20 லட்சம் ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளார். பேரம் பேசப்பட்ட தொகை சஜியின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதும் அவர் மகள்களை டெல்லிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டு உள்ளார் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து போலீசார் சஜியை விசாரிக்க சென்றனர். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவாகிவிட்டார். அவரின் 2 மகள்களையும் குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். இந்நிலையில் மகள்களை விற்க முயன்ற அர்ச்சகர் சஜியை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த சில அமைப்பினர் காவல் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications