பெண்களின் சபரிமலையான மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் திருவிழா தொடங்கியது
கன்னியாகுமரி: பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும், மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிப் பெருவிழா கொடியேற்றம் ஞாயிறுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. 10 நாள் நடைபெறும் இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். பெண்கள் இருமுடி செலுத்தி பொங்கல் வைத்து சாமி கும்பிடுவார்கள்.
இந்த ஆண்டுக்கான மாசிப் பெருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை காலை 7.50 மணிக்கு நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் கே.டி.பச்சைமால், பி.செந்தூர்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நாஞ்சில் ஏ.முருகேசன், பிரின்ஸ், ஹெலன் டேவிட்சன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
6 ஆம் திருவிழா நாளில் (மார்ச் 8) காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதலும் பகல் 12 மணிக்கு யானை மீது களபம் பவனி வருதலும் நடைபெறுகிறது.
இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், தொடர்ந்து இரவு 12 மணிக்கு வலியபடுக்கை பூஜையும் நடைபெறுகின்றன.
மார்ச் 1210 ஆம் திருவிழா நாளில் அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோயிலிருந்து யானை மீதுகளபம் கோயிலுக்கு எடுத்து வரப்படுகிறது. காலை 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதலும், காலை 4.30 மணிக்கு அடியந்திர பூஜையும் நடைபெறுகின்றன.
மாசிப் பெருவிழாவின் பத்துநாளும் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் 10 லட்சத்திற்கும் பக்தர்கள் திரண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications