டெசோ சார்பில் ஸ்டாலின் தலைமையில் நாளை இலங்கை தூதரகம் முற்றுகை
Subscribe to Oneindia Tamil
சென்னை: டெசோ அமைப்பின் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை நாளை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று டெசோ அமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து டெசோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சர்வதேச போர்க் குற்றவாளி இலங்கை இனவாத அதிபர் ராஜபக்சேவை கண்டித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளை காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் இருந்து புறப்படுகிறது.
இந்த முற்றுகை அறப்போருக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தி.க. தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ரவிக்குமார் முன்னிலை வகிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆயிரம் பேர் இதில் பங்கேற்பார்கள் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளையும் திமுக செய்து வருகிறதாம்.












Click it and Unblock the Notifications