தென் சென்னைக்கு வருகிறது நெம்மேலி கடல் குடிநீர்: 11ம் தேதி முதல்...
சென்னை: நெம்மேலியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் மையத்தில் இருந்து தென் சென்னைக்கு வரும் திங்கட்கிழமை முதல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். இதையொட்டி குழாய்களை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை மாநகரின் குடிநீர் பற்றாக்குறையை போக்க மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் மையம் துவங்கப்பட்டது. அங்கிருந்து வட சென்னைக்கு தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலியில் ரூ.908 கோடி செலவில் மேலும் ஒரு கடல் நீரைக் குடிநீராக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து குழாய் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படும். அதற்காக வேளச்சேரி, திருவான்மியூர், சோழிங்கநல்லூர், பள்ளிப்பட்டு ஆகிய இடங்களில் குடிநீர் சேமிப்பு தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக கடந்த 6 மாதத்திற்கு முன்பே தரையில் குழாய்கள் பதிக்கப்பட்டன. அந்த குழாய்களில் உள்ள மண்ணை அகற்றும் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
இந்த பணி கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்துவிட்டது. வரும் சனிக்கிழமைக்குள் குழாய்கள் முற்றிலும் சுத்தம் செய்யப்பட்டுவிடும். இதையடுத்து வரும் திங்கட்கிழமை முதல் நெம்மேலியில் இருந்து தென் சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
நெம்மேலி மையம் மூலம் வேளச்சேரி, திருவான்மியூர், ஐஐடி, பழைய மகாபலிபுரம் ரோடு, கிழக்கு கடற்கரை சாலை ரோடு, சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications