சிங்கள கடற்படை அட்டூழியம்: இலங்கை இன்னும் நட்பு நாடு தானா? திருமா ஆவேசம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கோடியக்கரைக்கு அருகே இந்தியக் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் செண்பகம் (வயது 40) என்கிற மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார். படகுகள் நாசமாகியிருக்கின்றன.
இரண்டொரு நாட்களுக்கு முன்பு தான் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளது. அவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கூறிய பின்னரும் இதுவரை இலங்கை அரசு அதை மதிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி இலங்கைக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது.
ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடந்தபோது இலங்கை, இந்தியாவின் நட்பு நாடு என்று நமது வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் குறிப்பிட்டார். தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும்விதமாக அந்தப் பேச்சு இருந்தது. இலட்சக் கணக்கில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததோடல்லாமல், இந்தியத் தமிழ் மீனவர்கள் மீதும் இலங்கை அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 500க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை படுகொலை செய்திருக்கிறது. இந்தியாவுக்கு உரிமையான கச்சத்தீவை ஒப்பந்தத்துக்கு மாறாக இலங்கை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பின்னரும் இலங்கை ஒரு நட்பு நாடு என்று இந்தியா சொல்வது நமக்குப் புரியாத புதிராகவே உள்ளது.
இந்திய இராணுவ வீரர் ஒருவரை பாகிஸ்தான் இராணுவத்தினர் கொன்றுவிட்டார்கள் என்ற செய்தி தெரிந்து இந்தியாவே கொந்தளித்தது. பாகிஸ்தானுடன் போர் மூளக்கூடும் என்ற அளவுக்கு இந்திய அரசின் நடவடிக்கைகள் கடுமையாக இருந்தன. ஆனால், 500க்கும் மேற்பட்ட அப்பாவி இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்டபோதும் இந்திய அரசு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. படுகொலை செய்யப்படுபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் இப்படி பாராமுகமாக இருக்கிறார்களா என்ற கேள்வி தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. இதற்கு இந்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். இப்போதும் இலங்கை இந்தியாவின் நட்பு நாடுதானா என்பதை இந்தியப் பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications