தாக்குதல் அபாயம் - கார்த்தி சிதம்பரத்திற்குச் சொந்தமான மதுரை மாலில் போலீஸ் குவிப்பு
Subscribe to Oneindia Tamil

மதுரை தல்லாகுளத்தில் பிரமாண்டமான விஷால் தி மால் என்ற வணிக வளாகம் உள்ளது. இந்த மாலில் கார்த்தி சிதம்பரத்திற்கு முக்கியப் பங்கு உண்டு என்று கூறப்படுகிறது. இங்கு அவருக்குச் சொந்தமான தியேட்டர்கள் உள்ளனவாம்.
இந்த நிலையில், இந்த வணிக வளாகத்தில் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தப் போவதாக தகவல் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. அதன் பேரில் போலீஸார் அங்கு விரைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் வணிக வளாகத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications