டெல்லியில் மருத்துவ மாணவி மரணத்துக்குப் பின்னரும் அதிகரிகரிக்கும் கற்பழிப்புகள்!!
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பம் நாட்டை உலுக்கியது. ஆனாலும் தலைநகர் டெல்லியில் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரித்தே வருகிறது என்று அதிர்ச்சி தகவலைத் தருகிறது புள்ளி விவரங்கள்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. இருப்பினும் கூட பலாத்கார சம்பவங்கள் டெல்லியை ஆட்டுவித்தே வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் 5 பேர் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

2 நாளில் 5 பேர்
டெல்லியில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த புதன்கிழமையும், வியாழக்கிழமையும் ஹோட்டலில் பணிபுரிந்த இளம்பெண், 15 வயது வேலைக்கார சிறுமி, குடும்பத்தலைவி, வேலை தேடி வந்த பெண், மற்றும் 8 வயது சிறுமி என 5 பேர் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

2மணி நேரத்துக்கு ஒரு பலாத்காரம்
பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக அண்மையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் தலைநகர் டெல்லியில் மட்டும் 2 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்படுவதாக சொல்கிறது

2012-ல் 6 மணி நேரத்துக்கு ஒரு பலாத்காரம்
ஆனால் கடந்த ஆண்டு ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கு ஒரு பெண் பலாத்கார செய்யப்பட்டதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன..

டெல்லியில் எங்கு அதிகம்?
டெல்லியை ஒட்டி உள்ள நகரங்களான குர்கான், நொய்டாவில்தான் அதிகளவிலான பலாத்கார சம்பவங்கள் நடைபெறுகின்றன. குர்கானில் ஒரு மாதத்துக்கு 7 சம்பவங்கள் நடைபெற்று வந்தது. தற்போது இது 8 ஆக அதிகரித்துள்ளது.

நொய்டா மோசம்
நொய்டாவிலும் நடப்பாண்டு பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் 4 பலாத்கார சம்பவங்கள் என்பது மாறிப் போய் 10 ஆக அதிகரித்துள்ளது.

90% பெண்களின் கருத்து
டெல்லியில் இரவு நேரத்தில் நடமாடுவது பாதுகாப்பானது அல்ல என்பதுதான் அங்கு வசிக்கும் 90% பெண்களின் கருத்தாக இருக்கிறது. 3-ல் 2 பங்கு பெண்கள் கூறுகையில், டெல்லி தெருக்களில் நடந்து செல்லும் போது தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், அலுவலகங்களில் பாலியல் கண்ணோட்டத்துடன் நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.

பாதுகாப்பான நகரமா?
டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் அல்ல என்று 94% பேரும், இரவு நேரம் பாதுகாப்பானது அல்ல 96% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications