சவூதி மருத்துவமனையில் தூத்துக்குடி முத்துராஜ் மாசிலாமணி உடல்: ரியாத் தமிழ்ச் சங்கம் அறிக்கை

இது குறித்து ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சமூக சேவைப் பிரிவு சார்பில் அஹமது இம்தியாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சவூதியில் வாழும் தமிழர்களே உதவுங்கள்! என்று தலைப்பிட்டு கடந்த சில நாள்களாக ஒரு செய்தி நாளேடுகளிலும், ஃபேஸ்புக்கிலும், இணைய தளங்களிலும் வெளியாகியிருந்தது. இதை மனிதாபிமான முறையில் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சமூக சேவைப்பிரிவு கையில் எடுத்து கேட்டதில் நடந்த சம்பவம் தெரிய வந்தது.
சம்பவ விவரம்,
பிப்ரவரி மாதம் 18ம் தேதி அன்று முத்துராஜ் மாசிலாமணி அவர்கள் ஓட்டிச் சென்ற வாகனம் சாலை விபத்தைச் சந்தித்து வாகனத்தில் சென்ற அவர் வேலை பார்க்கும் குடும்பத்தினர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துவிட்டனர். ரியாத்தில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அல் கொயா பொது மருத்துவமனைக்கு உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த முத்துராஜ் மாசிலாமணி அவர்களை காலை 8:20க்கு கொண்டு வந்து அனுமதித்துள்ளார்கள். அன்று காலை 11:30 மணியளவில் அவரின் உயிர் மருத்துவமனையில் பிரிந்துவிட்டது.
உடலை இதுவரை யாரும் உரிமைக் கேட்டு வராததால் மருத்துவமனையிலேயே இன்னும் உடல் உள்ளது, அபிலாஷ் என்ற தமிழர் அந்த உடலைப் பார்த்து அவரின் புகைப்படத்தைச் சரிபார்த்து உறுதி செய்துள்ளார். அவர் குடும்பத்தினரின் முழுமையான முகவரி தெரியாததால் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மேலதிக விபரங்கள் பெற உங்களின் தொலைபேசி எண்ணை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பினால், தொலைபேசியில் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு தூதரக உதவியுடன் ரியாத் தமிழ்ச் சங்கம் உடலை தாயகம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இது பற்றிய விவரங்களை அறிய உதவிய, விபத்து நடந்த அல் கொயாவில் வேலைபார்க்கும் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் என்பவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications