இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானத்தில் திருத்தம்

Subscribe to Oneindia Tamil

US changes in draft against Sri lanka
ஜெனிவா: இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் கைதான விடுதலைப்புலிகளை விசாரிக்க சிறப்பு ராணுவ நீதிமன்றம் அமைக்க வேண்டும். 2006-ல் அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வெளியிடவேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்க்க இலங்கை அரசு சர்வதேச உதவியை நாடலாம். மனித உரிமைகள் மீறல் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இலங்கையில் தமிழர்களை மறு குடியமர்த்தும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. சிறுபான்மையினருக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் பகுதிகளில் உள்ள ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஏற்கனவே தாக்கல் செய்த தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணைய அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை இலங்கை அமல்படுத்த வேண்டும், மனித உரிமை மீறல் குறித்து சுதந்திரமான, நம்பத்தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா மாற்றம் செய்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+