டெல்லி பேருந்தில் சீரழிக்கப்பட்டு இறந்த மாணவிக்கு மிஷல் ஒபாமா வழங்கிய 'வீர மங்கை விருது'
வாஷிங்டன்: டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு இறந்த மாணவிக்கு அமெரிக்கா வீர மங்கை விருது வழங்கியது. விருதை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் பெற்றுக் கொண்டார்.
கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு இறந்த 23 வயது மாணவிக்கு மகளிர் தினமான நேற்று அமெரிக்க அரசு வீர மங்கை விருது வழங்கியது. இந்த விருதை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷலும் வழங்கினர். விருதை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் பெற்றுக் கொண்டார்.
நிர்பயா என்று அழைக்கப்படும் அப்பெண்ணின் தைரியத்தை கெர்ரி புகழ்ந்து பேசினார். பின்னர் அனைவரும் எழுந்து நின்று டெல்லி மாணவிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
அப்போது கெர்ரி மேலும் கூறுகையில்,
கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஒரு பேருந்தில் ஏறிய நிர்பயா கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். ஆனால் அவர் போராடினார். அவர் உயிருக்காக போராடிய நேரத்தில் நீதிக்காகவும் போராடினார். தன்னை கற்பழித்தவர்களின் அடையாளத்தை கூறி அவர்களை கைது செய்ய உதவினார். கனத்த இதயத்துடன் நிர்பயாவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications