விவாகரத்து வழக்கை டிஸ்மிஸ் செய்த பெண் நீதிபதியிடம் செருப்பு கொடுத்த முதியவர் கைது
திருவனந்தபுரம்: மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ததால் ஆத்திரமடைந்த முதியவர் கண்ணூர் குடும்ப நல நீதிமன்ற பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் கண்ணூர் எளயாவூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஜனகீய பிரகதிகரணவேதி என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். அரசு துறைகள் மூலமோ, தனியார் துறை முலமோ யாருக்காவது, ஏதாவது வகையில் சிரமம் ஏற்பட்டால் இந்த அமைப்பு அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும். இந்த நிலையில் இந்த அமைப்பின் தலைவரான பிரபாகரனுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.
பிரபாகரனுக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. 5 வருடங்களுக்கு முன் விவாகரத்து கோரி கண்ணூர் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வாய்தா மேல் வாய்தாவாக போய் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி பிரசன்னாகுமாரி பிரபாகரனின் விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்தார்.
மனைவியிடம் இருந்து எப்படியும விவாகரத்து கிடைத்து விடும் என பிரபாகரன் மிகுந்த நம்பிக்கையில் இருந்தார். ஆனால் தீர்ப்பு எதிராக அமைந்தது அவருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மகளிர் தினத்தன்று பிரபாகரன் கையில் ஒரு பார்சலுடன் குடும்ப நல நீதி்மன்றத்துக்கு சென்றார். அப்போது நீதிபதி பிரச்சனகுமாரி வழக்கு விசாரணையில் பரபரப்பாக இருந்தார்.
ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே அரங்கத்திற்குள் நுழைந்த அவர் நீதிபதிக்கு மகளிர் தினத்தை ஓட்டி ஒரு பரிசு கொண்டு வந்திருப்பதாக சத்தம் போட்டு கூறினார். பின்னர் அந்த பார்சலை அவர் நீதிபதியிடம் கொடுக்க முயன்றார். இதையடுத்து காவலுக்கு நின்றிருந்த போலீசாரிடம் அவரை வெளியேற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
போலீசார் பிரபாகரனை வெளியேற்றி விட்டு அவரிடமிருந்த பார்சலை கைப்பற்றி பரிசோதித்த போது அதில் 2 செருப்புகள் இருந்தது தெரிய வந்தது. இதை பார்த்த் அங்கிருந்த வக்கீல்கள் அதிர்ச்சி அடைந்தனர். நீதிபதிக்கு செருப்பு கொடுப்பதா என பிரபாகரனை அங்கிருந்த வக்கீல்கள் தாக்கினர்.
இதுகுறித்து அறிந்ததும் கூடுதல் போலீசார் நீதிமன்றத்துக்கு விரைந்தனர். பின்னர் போலீசார் பிரபாகரனை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications