ஆடு தேடிப் போன 12 வயது சிறுமியை கற்பழிக்க முயன்ற 19 வயது இளைஞர்

Subscribe to Oneindia Tamil

உளுந்தூர்ப்பேட்டை: காணாமல் போன ஆட்டைத் தேடிச் சென்ற மாணவியை கரும்புக் காட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் ஆடு மேய்க்கும் இளைஞர் ஒருவர். அவரிடமிருந்து அந்த சிறுமி தப்பி ஓடி வந்து விட்டார்.

உளுந்தூர்பேட்டை அருகே கிழக்கு மருதூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு 12 வயதில் மகள் உள்ளார். அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

சனிக்கிழமையன்று தங்களுக்குச் சொந்தமான ஆடுகளை மேய்க்க வயலுக்குச் சென்றார் பெரியசாமி மகள். மதியவாக்கில் அவர் ஆடுகளை விட்டு விட்டு சாப்பிட வீட்டுக்கு வந்தார். பின்னர் மீண்டும் வயலுக்குப் போனபோது ஒரு ஆட்டைக் காணவில்லை என்று தெரிந்தது.

அப்போது அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 19 வயதான ஆனந்தராஜ் என்பவர், அருகில் உள்ள கரும்புத் தோட்டத்துக்குள் உனது ஆடு போய் விட்டது என்றார். இதை நம்பிய பெரியசாமி மகள் கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்தார். அப்போது ஆனந்தராஜும் உள்ளே புகுந்து, பெரியசாமி மகளின் வாயைப் பொத்தி தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார்.

ஆனால் பெரியசாமியின் மகள் கடுமையாகப் போராடிஅங்கிருந்து தப்பி ஓடி வந்து தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறினார். இதையடுத்து அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆனந்தராஜைக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+