டெல்லியில் ஓடும் காரில் 34 வயது பெண்ணை கற்பழித்த 4 பேர்
டெல்லி: டெல்லியில் உள்ள அக்ஷர்தம் கோவிலுக்கு வெளியே 34 வயது பெண் கடத்தப்பட்டு ஓடும் காரில் 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு டெல்லியைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் பாண்டவ் நகரில் இருந்து அக்ஷர்தம் கோவிலுக்கு நேற்று காலை சென்றுள்ளார். அவர் காலை 9 மணி அளவில் அக்ஷர்தம் கோவிலுக்கு வெளியே வந்தபோது ஒரு கார் அவர் அருகில் வந்துள்ளது. அதில் இருந்தவர்கள் அவரை காருக்குள் இழுத்துள்ளனர். ஆனால் காரில் இருந்தவர்கள் அவருக்கு தெரிந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
காரில் 2 பெண்கள், 4 ஆண்கள் இருந்துள்ளனர். அந்த ஆண்கள் அப்பெண்ணை ஓடும் காரில் மாறி மாறி கற்பழித்துவிட்டு பிரகதி மைதான் அருகே சாலையோரம் வீசிச் சென்றனர். அப்போது அந்த வழியாக வநத் கான்ஸ்டபிள் ஒருவர் அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனையில் அவர் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications