டெசோ பந்த்துக்கு தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இலங்கை தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட டெசோ அமைப்பு, இலங்கை தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஐ.நா. தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பதை வலியுறுத்தியும் செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் முழு வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தது.
இதனை எதிர்த்து வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று காலை தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வாலிடம் வந்தது.
அப்போது மனுவில் எதிர்மனுதாரர் குறிப்பிடப்படாமல் இருந்ததை சுட்டிக் காட்டிய நீதிபதி அதை குறிப்பிடுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து டெசோ அமைப்பை எதிர்மனுதாரராக பதிவு செய்து புதிய மனு தாக்கல் செய்வதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பிற்பகலுக்கு மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதி ஒத்திவைத்தார். பிற்பகலில் தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி பால் வசந்தகுமார் ஆகியோர் கொண்ட முதன்மை பெஞ்ச் முன்பு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரரை விசாரிக்காமல் தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மேலும் மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக அரை அணுகி முறையிடலாம். அவ்வாறு மனுதாரர் அணுகினால், அந்தக் கோரிக்கையை அரசு பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் நாளைய டெசோ ஸ்டிரைக்குக்கு தடை ஏதும் இல்லை.


Click it and Unblock the Notifications
