ஜன சங்க காலம் தொடங்கி, 45 ஆண்டுகளுக்கு பின் உடுப்பி-மங்களூரில் படுதோல்வி அடைந்த பாஜக!

உடுப்பி நகராட்சியை பாஜக தான் தொடர்ந்து தன் வசம் வைத்திருந்தது. பாஜகவின் தாய் கட்சியான ஜன சங்க காலத்தில் இருந்தே இந்த நகராட்சி அதன் வசம் தான் இருந்து வந்தது. கர்நாடகத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கு முன்பே இங்கு அந்தக் கட்சிக்கு ஆதரவு இருந்து வந்தது.
மேலும் கடந்த பல சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் உடுப்பி மற்றும் மங்களூரில் பாஜக தான் தொடர்ந்து வென்று வந்தது.
இந் நிலையில் முதல் முறையாக மங்களூர் மாநகராட்சியையும் உடுப்பி நகராட்சியையும் பாஜக இழந்துள்ளது. இந்த இரு இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
இந்தப் பகுதியில் தான் மதவாத இயக்கங்களின் செயல்பாடுகளும் அதிகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமீபகாலமாக ஸ்ரீராம் சேனா போன்ற அமைப்புகள் பொது இடத்தில் ஆண் நண்பர்களுடன் பேசும் பெண்களைத் தாக்குவதும், பார்களுக்குள் புகுந்து பெண்களை அடித்து உதைப்பதும், பிறந்த நாள் பார்ட்டி கொண்டாடினால் வீடுகளுக்குள் புகுந்து அடிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இவர்கள் மீது பாஜக அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அமைதி காத்து வந்தது. ஸ்ரீராம் சேனா தலைவர் முத்தாலிக்கு எதிராக நாடு முழுவதும் பெண்கள் 'பிங்க் ஜட்டி' (Pink underwear campaign) இயக்கம் நடத்தியதும், அவருக்கு கூரியரில் ஆயிரணக்கணக்கான ரோஸ் வண்ண ஜட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இப்போது இந்தப் பகுதியில் பாஜக முதன்முறையாக தனது செல்வாக்கை இழந்துள்ளது. பாஜகவில் நடந்து வந்த கோஷ்டிப் பூசல், பாஜக அமைச்சர்கள், முதல்வர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஒரு காரணமாக இருந்தாலும் தீவிர மதவாத அமைப்புகளின் செயல்பாடுகளே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications