ஐ.ஏ.எஸ் தேர்வில் திடீர் மாற்றம்: மறைமுக இந்தித் திணிப்பு- பிரதமருக்கு கருணாநிதியும் புகார் கடிதம்

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளது.
பிராந்திய மொழி இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே அந்த மொழியில் தேர்வு எழுதலாம் என்ற இந்த அதிரடியான மாற்றம் கிராமப்புற மாணவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன்மூலம் தேர்ச்சி பெற்ற 25 மாணவர்கள் மட்டுமே அந்தந்த பிராந்திய மொழிகளில் விடை எழுத முடியும். இதன்மூலம் தேர்வு எழுதுபவர்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.
அதே நேரத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கு இது போன்ற கட்டுப்பாடுகள் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
பிராந்திய மொழி இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இந்த மொழியில் தேர்வுகள் எழுதவும், இந்த நடைமுறையால் பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக குறையும்.
தமிழ் இலக்கியத்தை விருப்ப பாடமாக தேர்ந்து எடுத்து இருந்தாலும் தமிழ் இலக்கிய பட்டதாரிகள் மட்டுமே தமிழ் வழியில் தேர்வு எழுத முடியும். இதுபோன்ற கட்டுப்பாடுகள் சிவில் சர்வீசல் (மெயின்) தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு தடையாக உள்ளது. அவர்கள் இந்தி அல்லது ஆங்கில வழியில் கல்வி பயில வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய புதிய முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மாற்றம் இந்தித் திணிப்பை மறைமுகமாக திணிப்பதுபோல் உள்ளது. இது நமது நாட்டுக்கு பண்டித நேரு அளித்த வாக்குறுதியை மீறுவதாக உள்ளது. மேலும் இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களிடையே ஆரோக்கியமற்ற மற்றும் சமநிலையற்ற போட்டியை உருவாக்குவதாக உள்ளது.
எனவே, சமீபத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையை புதிய தேர்வு முறையை உடனடியாக வாபஸ் பெறவேண்டும். மேலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு மொழியில் மத்திய அரசு பணியாளர் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications