விஜயகாந்த் கட்சி ஆபீஸ் வாசலில் 2 டாபர்மேன் நாய்கள்... ஏன் ஏன் ஏன்?

சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமைக் கழக அலுவலகம் உள்ளது. முன்பு இது ஆண்டாள் அழகர் திருமண மண்டபமாக இருந்தது. பின்னர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததும் கட்சி அலுவலமாக மாற்றினார். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பாலத்திற்காக மண்டபத்தின் பெரும் பகுதியை இடித்து விட்டனர். மீதமுள்ள கட்டடம் தற்போது கட்சி அலுவலகமாக உள்ளது.
இந்த அலுவலகத்திற்குள் இரண்டு வாரங்களுக்கு முன்பு முகமூடி அணிந்த ரகசிய மனிதர் ஒருவர் இரவு நேரத்தில் நுழைந்தாராம். பின்னர் கட்சியின் நிர்வாக விவரங்கள் அடங்கிய கம்ப்யூட்டர் டிஸ்க்கை எடுத்துச் சென்று விட்டாராம்.
இவர் யார் என்பது தெரியவில்லை. ஆனால் கட்சிக்காரராகத்தான் இருக்க வாய்ப்பில்லை, காவல்துறையைச் சேர்நத் உளவுத்துறையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர் வந்து போன காட்சி கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானதாம். இருப்பினும் போகும்போகு கேமராவுக்கான வயரை துண்டித்து விட்டுப் போய் விட்டாராம் அந்த நபர்.
இந்த விவகாரத்தால் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். இருப்பினும் போலீஸுக்குப் போக அவர் விரும்பவில்லையாம்.இதனால் புகார் ஏதும் தரப்படவில்லையாம்.
இருப்பினும் அறிமுகம் இல்லாத யாரேனும் அலுவலகத்திற்குள் வந்தால் நன்றாக கவ்வி கடித்துத் துப்பும் வகையிலான 2 டாபர்மேன் நாய்களை நிறுத்தி வைத்துள்ளனராம். இப்போது இவைதான் இரவுக் காவலில் ஈடுபட்டுள்ளனவாம்.












Click it and Unblock the Notifications