அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தொடங்கின ஈரான் - பாக்.!
இஸ்லாமாபாத்: அமெரிக்காவின் கடும் எச்சரிக்கையையும் மீறி பாகிஸ்தான்ன் -ஈரான் இடையேயான எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்கு எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்துக்கு தொடக்கம் முதலே அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் ஈரான் இந்த எதிர்ப்பை நிராகரித்தே வந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானின் எல்லை மாகாணமான பலுசிஸ்தானில் இந்த எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தான், ஈரான் மற்றும் பல அரபு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையேயான எரிவாயு குழாய் அமைக்கும் பணியானது இருநாடுகளின் பொருளாதார உறவுக்கு வழிவகுக்கும் என்பது இருநாட்டு அதிபர்களின் கருத்தாகும். மொத்தம் 780 கிலோ மீட்டர் தொலைவுக்க்கான இந்த எரிவாயு குழாய் அமைக்கும் பணியானது 2014-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவடைந்துவிடும். இந்த இயற்கை எரிவாயு குழாய் மூலம் அணு ஆயுதம் எதையும் தயாரித்துவிட முடியாது என்பதும் இருநாடுகளின் கருத்து.
ஆனால் அமெரிக்கா இது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க செய்தித் தொடர்பாளார் விக்டோரியா நூலந்த் கூறுகையில், ஈரான் பாகிஸ்தான் எரிவாயு குழாய் இணைப்பு திட்டம் குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறோம். இது குறித்து கவலைகளையும் நாங்கள் பாகிஸ்தானிடம் விளக்கியிருக்கிறோம். இதனால் பாகிஸ்தான் பொருளாதாரத்தடைகளை சந்திக்க நேரிடும் என்றார்.
-
குவைத் ஏர்போர்ட்டில் துடிதுடித்து உயிரிழந்த இந்தியர்.. ஈரானின் ட்ரோன் தாக்குதலில் பயங்கரம்! திக்திக் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications