''இந்த லெட்டருக்கு பதில் சொல்லுங்களேன் மிஸ்டர் ராசா''!: காங்கிரஸின் '2ஜி பாலிடிக்ஸ்'!

காங்கிரஸ் எம்பியான சாக்கோவின் இந்தச் செயலுக்கு திமுக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது குறித்து ஜேபிசி கூட்டத்தில் கேள்வி எழுப்புவேன் என்று திமுக எம்பி டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
2ஜி விவகாரத்தை விசாரித்து வரும் ஜேபிசி முன் ஆஜரான மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் வாகனாவதி தனது வாக்குமூலத்தில், ராசா மீது மட்டும் கடுமையான குற்றங்களை சுமத்தினார். இந்த விவகாரத்தில், தொலைத் தொடர்புத்துறையின் குறிப்பில் ராசா பேனாவால் அடித்து திருத்தங்கள் செய்ததாகவும் கூறியிருந்தார்.
இந்த ஊழலில் இந்தத் திருத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இந்த முழு ஊழலுக்கு ராசா மட்டுமே காரணம் என்பது போன்ற தோற்றம் வாகானவதியால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதை ராசாவும் திமுகவும் கடுமையான எதிர்க்கின்றனர். தன் மீது தவறே இல்லை என்று கூறும் ராசா, இது தொடர்பாக வாகனாவதியின் வாதங்களுக்கு பதிலளிக்க தனக்கு ஜேபிசி வாய்ப்புத் தர வேண்டும் என்கிறார். இது தொடர்பாக சபாநாயகர் மீரா குமாருக்கு கடிதம் எழுதினார். ஆனால், வாய்ப்புத் தரப்படவில்லை.
இந் நிலையில், தன்னை ஜேபிசி முன் ஆஜராக விடாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று ராசா மிரட்டி வருகிறார். திமுக தலைமையின் அனுமதியில்லாமல் ராசா இவ்வாறு மிரட்ட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அவர் ஜேபிசி முன் ஆஜரானால் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் பெயரையும் இழுத்துவிட வாய்ப்பிருப்பதாக காங்கிரஸ் கருதுகிறது. இதனால் இவர்களையும் விசாரிக்க வேண்டிய நிலைக்கு ஜேபிசி தள்ளப்படலாம். இதன் காரணமாக, இவர்களது பதவிகளுக்கே பிரச்சனை வரலாம்.
இதைத் தவிர்க்க காங்கிரஸ் எல்லா முயற்சிகளிலும் இறங்கியுள்ளது. இதனால் ராசாவை விசாரணைக்கு அழைப்பதை ஜேபிசி தலைவரான காங்கிரஸ் எம்பி, சாக்கோ தவிர்த்து வருகிறார். அதற்க பல நொண்டி சாக்குகளை கூறி வருகிறார்.
அதே நேரத்தில் ராசாவை நேரில் ஆஜராக விட்டால் அவரிடம் ஜேபிசியில் உள்ள பாஜக, இடதுசாரி எம்பிக்கள் ஏதாவது ஏடாகூடமாக கேள்விகளைக் கேட்க, அதற்கு ராசாவும் ஏடாகூடாமாக ஏதாவது பதில் சொல்லி விட்டால், என்ன செய்வது என்றும் காங்கிரஸ் அஞ்சுகிறது.
இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள திமுக எம்.பி. டி.ஆர். பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. குருதாஸ் தாஸ்குப்தா உள்ளிட்டோர் ஆ.ராசாவை சாட்சியம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தியும் கூட அதை பி.சி.சாக்கோ ஏற்க மறுத்து வருகிறார்.
இந்த விவகாரத்தில் கடுப்பானதால் தான் திமுக டெசோ மூலமாக இலங்கை விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு காங்கிரசுக்கு குடைச்சல் தர ஆரம்பித்துள்ளதாக காங்கிரஸ் சந்தேகிக்கிறது.
2ஜி விவகாரத்தில் திமுகவுக்கு நெருக்கடி தரத் தர, திமுக தரப்பு இலங்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடியை அதிகரித்து வருகிறது.
நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பதையடுத்து, இந்த விவகாரத்தில் நீங்கள் சொல்ல நினைப்பதை எழுத்துப்பூர்வமாக தரவும் என்று ராசாவுக்கு ஜேபிசி தலைவரான பி.சி.சாக்கோ கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஜேபிசி சார்பில் சில கேள்விகள் அடங்கிய பட்டியலையும் அனுப்பி வைத்துள்ளார். இதற்கு பதில் தரவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை சாக்கோ தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவாகக் கருத முடியவில்லை. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையின் விருப்பத்தைத் தான் சாக்கோ நிறைவேற்றி வருவதாகத் தெரிகிறது.
இந்த கடிதம் வந்த விவரத்தை ஆ.ராசாவும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், ராசாவுக்கு நேரில் சாட்சியம் அளிக்க அனுமதிக்காமல் எழுத்து மூலம் பதில் அளிக்க சொல்வதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டி.ஆர்.பாலு கூறுகையில், ஜேபிசியில் உள்ள மற்ற உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் பி.சி.சாக்கோ தன்னிச்சையாக முடிவு எடுத்திருக்கிறார். குழு உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்காமல் அவரால் எப்படி கடிதம் எழுத முடியும்?. அது சரியல்ல. அடுத்த ஜேபிசி கூட்டத்தில் இதற்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் ஆர்.ராசா, தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. என்ற முறையில் தனக்கு ஜேபிசி முன் ஆஜராகி அதில் உள்ள 20 உறுப்பினர்கள் முன்னிலையில் நேரில் சாட்சியம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி ராசா மீண்டும் கடிதம் எழுத முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications