சென்னையில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை-கைகள் துண்டாயின!
சென்னை: சென்னை சூளைமேட்டில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வெறித் தாக்குதலில் அவரது இரு கைகளும் துண்டாகிவிட்டன.
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் இளங்கோ (23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பார்த்தீபன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இளங்கோவின் சித்தியுடன் பார்த்தீபனுக்கு தவறான உறவு இருந்து வந்தது. இதை இளங்கோ கண்டித்தார். இந் நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு பார்த்தீபனை இளங்கோ அரிவாளால் வெட்டினார். இதில் இளங்கோ கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த இளங்கோ நேற்று முன்தினம் தான் சிறைக்குச் செல்ல காரணமாக இருந்த பார்த்தீபனை பழிவாங்க அரிவாளுடன் சுற்றினார்.
இந்தத் தகவல் பார்த்தீபனுக்கு தெரியவந்தது. நேற்றிரவு டாஸ்மாக் கடையில் இளங்கோ மது அருந்திவிட்டு, பக்கத்தில் உள்ள கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பார்த்தீபனும் அரது நண்பர்களும் இளங்கோவிடம் இருந்த அரிவாளைப் பறித்து அவரை சரமாரியாக வெட்டினர்.
இதில் இளங்கோவின் கைகள் துண்டாகி விழுந்தன. தலையிலும் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த இளங்கோ அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து கொலையாளிகள் பார்த்தீபன், கார்த்திக், வினோத், யுவராஜ் ஆகிய 4 பேரும் சூளைமேடு காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
போலீசாரிடம் பார்த்தீபன் கொடுத்த வாக்குமூலத்தில், என்னை ஏற்கனவே இளங்கோ 6 மாதத்துக்கு முன்பு அரிவாளால் வெட்டினான். மீண்டும் என்னை வெட்ட அரிவாளுடன் சுற்றினான். இதனால் அவனை பழிக்கு பழி வாங்க அவன் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி அவனை வெட்டி கொன்றோம் என்று கூறியுள்ளான்.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications