டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளிலும் அதிரடி மாற்றம்: பொதுத் தமிழ் நீக்கம்- புதிய தலைவர் இன்று பொறுப்பேற்ப
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப்-1, குரூப்-1ஏ, 1பி, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான மற்றும் இதர தொழில்நுட்ப தேர்வுகளுக்கான தமிழ் பாடத்திட்டத்தினை முற்றிலும் மாற்றி அமைத்ததுள்ளது. தனது இணையதளத்தில் புதிய பாடத்திட்டத்தினை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு குரூப் 1 தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அனைத்து தேர்வுகளுக்கும் 72 பக்க புதிய பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி நேற்று இரவு வெளியிட்டுள்ளது.
எஸ்எஸ்எல்சியை அடிப்படை தகுதியாகக் கொண்ட குரூப்- 4 பணியிடங்கள் மற்றும் விஏஒ தேர்வுகளுக்கான புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை குரூப் 4 தேர்வில் பொது அறிவு பகுதிக்கு 100 மதிப்பெண்களும், பொதுத்தமிழுக்கு 100 மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. புதிய பாடத்திட்டத்தின் படி பொது அறிவு, புத்தி கூர்மை, சிந்தித்து விடை அளித்தல் ஆகிய பகுதிகளிலிருந்து 150 வினாக்கள் கேட்கப்பட்டு, அதற்கு 225 மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீத்முள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத்தமிழில் இருந்து கேட்கப்படும். அதற்கு 75 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. குருப்-2 தேர்வில் அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவு பகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் வங்கி போட்டித் தேர்வு போன்று புத்தி கூர்மை, சிந்தித்து விடை அளிக்கும் திறன் ஆகிய புதிய பகுதிகளுக்கு கூடுதல் மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது.
நேர்முகத்தேர்வு, நேர்முகத்தேர்வு அல்லாதது என இரு வகையாக பிரிக்கப்பட்டு, நேர்முகத்தேர்விற்கான பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு என இரண்டு தேர்வுகளும், நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகளுக்கு ஒரே ஒரு தேர்வு மட்டும் எழுதினாலும் போதுமானது. இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ) தேர்வு குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது குறித்து, தேர்வாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், வருத்தமும் ஏற்பட்டுள்ளது.
புதிய தலைவர் பொறுப்பேற்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) புதிய தலைவராக ஏ. நவநீதகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்க உள்ளார். இவர், மேலும் சில மாற்றங்களை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications