காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான மதுரை ராணுவ வீரர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பெமினா பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் படை முகாம் மீது நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். இதையடுத்து பெமினா பள்ளி அருகே ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 5 ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பெருமாள்(31) என்பது தெரிய வந்துள்ளது. அவர் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள தும்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லிங்கம் என்பவரின் மகன் ஆவார். அவரது தாய் கிருஷ்ணவேணி. பெருமாளுக்கு ஞானபிரகாஷ், மகேஷ் என்ற 2 தம்பிகளும், ராஜராஜேஸ்வரி, ராஜேஸ்வரி என்ற 2 தங்கைகளும் உள்ளனர். பெருமாளுக்கு திருமணமாகவில்லை.
சிறு வயதில் இருந்து ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்ட பெருமாள் கடந்த 2010ம் ஆண்டு மத்திய ரிசர்வ் படையில் சேர்ந்தார். அவர் ஸ்ரீநகர் 73வது பட்டாலியனில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications