2ஜி: காங்கிரசின் 'அல்வாவுக்கு' ராசா 'காராசேவ்' பதிலடி!: என்னை நேரில் விசாரிக்க என்ன பயம்?

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு பற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பியான பி.சி.சாக்கோ தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதில் திமுக, அதிமுக, பாஜக, இடதுசாரிகள் உள்பட 20 எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழு முன்பு சமீபத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த அட்டார்னி ஜெனரல் வாகனாவதி (2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்த போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தவர்), கடந்த 2008ம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான செய்திக்குறிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு கடைசி நேரத்தில் அப்போதைய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவால் அது திருத்தப்பட்டதாகவும், சட்டம் மற்றும் நிதி அமைச்சகத்தின் யோசனையை அவர் நிராகரித்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
வாகானாவதியின் இந்தக் கருத்தை ஆ.ராசா மறுத்தார். நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க விரும்பிய அவர், இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 22ம் தேதி மக்களவை சபாநாயகர் மீராகுமாருக்கு கடிதம் எழுதினார்.
மேலும் திமுக சார்பிலும், நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்க ஆ.ராசாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.
ஆனால், ஆ.ராசா நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ அனுமதி அளிக்கவில்லை. காரணம், அவர் இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயர்களையும் இழுப்பார் என்று காங்கிரஸ் அஞ்சுவதால்.
இந் நிலையில் சில நாட்களுக்கு முன் ராசாவுக்கு சாக்கோ அனுப்பிய கடிதத்தில், 4 கேள்விகளைக் கேட்டு அவற்றுக்கு மட்டும் எழுத்துபூர்வமாக பதில் அளிக்குமாறு கூறியிருந்தார்.
இதைக் கண்டு திமுக கடும் கொந்தளிப்பு அடைந்துள்ளது. சாக்கோவின் இந்தக் கோரிக்கையை ராசாவும் நிராகரித்து விட்டார்.
இதுகுறித்து சாக்கோவுக்கு அவர் எழுதியுள்ள 2 பக்க கடிதத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக கூட்டுக்குழு முன்பு நான் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கவே விரும்புகிறேன். ஆனால், நான் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதை கூட்டுக் குழு ஏன் விரும்பவில்லை என்பது எனக்கு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன? மேலும் இந்த பிரச்சனையில் தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உள்ள பங்களிப்பு என்ன? என்பதை அறிவதற்காகத்தான் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் கூட்டுக்குழுவின் முன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும், என்னைப் பற்றிய தவறான அபிப்பிராயங்களுக்கும் நான் விளக்கம் அளிக்க முடியும்.
இந்த விவகாரத்தில் நான் பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் யோசனைகளை நிராகரித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக சிபிஐயோ அல்லது ஜேபிசியோ பிரதமரிடமோ அல்லது நிதியமைச்சரிடமோ எந்த வாக்குமூலமும் பெறவில்லை.
எனக்கு நேரில் ஆஜராகி விளக்கம் தர அனுமதி தந்தால், ஸ்பெக்ட்ரம் தொடர்பாக எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் அரசாங்கத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களின் (senior functionaries of the government) சம்மதத்தின் பேரில் கூட்டாக எடுக்கப்பட்டது என்பதையும் என்னால் உறுதிப்படுத்த முடியும். (இங்கு தான் பிரதமர்- நிதியமைச்சர் பெயர்களை ராசா இழுத்து விடுவார் என்று காங்கிரஸ் அஞ்சுகிறது)
மேலும் அட்டார்னி ஜெனரல் அளித்த சாட்சியம் அடங்கிய பிரதி எனக்கு அளிக்கப்படாத நிலையில், அதுபற்றிய எனது பதில் கேட்கப்பட்டு உள்ளது. நியாயமான விசாரணை நடைமுறை கொள்கைகளுக்கு மாறாகவே கூட்டுக்குழு விசாரணை உள்ளது. அட்டார்னி ஜெனரல் தெரிவித்த கருத்துக்களை மறுக்க எனக்கு முறைப்படி வாய்ப்பு அளிக்கப்பட்டால், உண்மையில் நடந்தது என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
இந்த பிரச்சனையில் எனது தரப்பு கருத்தை கேட்டு அறியாமல் கூட்டுக் குழு ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. விசாரணை நியாயமாக இருக்க வேண்டும் என்றும், முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காகவும் திறந்த மனதுடன் விசாரணையை தொடருமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராசா.
இதன் பின்னரும் ராசாவை நேரில் ஜேபிசி அழைக்காவிட்டால், இலங்கை விவகாரத்தில் 'டெசோ'வின் போராட்டம் தீவிரமாகும் என்பது 'குவா குவா' பாப்பா கூட சொல்லும்!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications