தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேருக்கு பதவி உயர்வு: அதிமுக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சுமார் 10 பேருக்கு தமிழக அரசு பதவி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழக போலீசில் உள்ள அதிகாரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு ஏ.டி.ஜி.பி. பதவியில் உள்ளவர்களுக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் அதற்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறைச் செயலாளர் மாலதி, டி.ஜி.பி. ராமானுஜம் ஆகியோர் அடங்கிய குழு பதவி உயர்வு பட்டியல் குறித்து நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியது.
இதில், ஐ.ஜி.க்களாக உள்ள சஞ்சய் அரோரா (நிர்வாகப் பிரிவு கூடுதல் கமிஷனர்), சுனில்குமார் (சீருடைப் பணியாளர் தேர்வாணையம்), சுனில்குமார் சிங் (நெல்லை கமிஷனர்) ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி. பதவி உயர்வு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதே போல டி.ஐ.ஜி.க்களாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் (எஸ்பிசிஐடி), சந்தீப் மிட்டல் (மத்திய அரசுப் பணி), பாலநாகதேவி (மதுரை டிஐஜி), ரவிக்குமார் (சென்னை கிழக்கு இணை கமிஷனர்), சேஷசாயி (மத்தியக் குற்றப்பிரிவு இணை கமிஷனர்), நல்லசிவம் (தலைமையிட இணை கமிஷனர்), ராமசுப்பிரமணி (ராமநாதபுரம் டிஐஜி) ஆகியோருக்கு ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இவர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிட்டு, புதிய பணியிடங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications